முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தில்லை நகர் கார்த்திக் வைத்திய சாலாவில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் : வாரியத் தலைவர் கு.ப. கிருஷ்ணன் பங்கேற்பு

Jun 20, 2026 - 11:39
Jun 20, 2026 - 14:57
முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தில்லை நகர் கார்த்திக் வைத்திய சாலாவில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் : வாரியத் தலைவர் கு.ப. கிருஷ்ணன் பங்கேற்பு

முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தில்லை நகர் கார்த்திக் வைத்திய சாலாவில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் : வாரியத் தலைவர் கு.ப. கிருஷ்ணன் பங்கேற்பு

தமிழக வெற்றி கழக தலைவர் முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர், பொதுச்செயலாளர் என். புஸ்ஸி ஆனந்த் உத்தரவின் படி மாநிலம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்படுகிறது.

திருச்சி மாநகர் மாவட்ட த.வெ.க. தலைமை ஆலோசனையின் படி அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் 3555 வது இலவச சித்த மருத்துவ முகாம் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு திருச்சி தில்லைநகர் 7வது குறுக்கு தெரு கார்த்திக் வைத்திய சாலாவில் நடைபெறுகிறது. விழாவிற்கு அனைத்திந்திய சித்தமருத்துவ சங்கத் தலைவர் கே. எஸ். சுப்பையா தலைமை தாங்குகிறார். விழாவில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப. கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைத்திந்திய சித்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்து ஏழை எளிய பொது மக்களுக்கு இலவச புடவைகள், உணவு மற்றும் இலவச மருந்துகள் வழங்குகிறார். திருச்சி மாநகராட்சி முன்னாள் சுகாதாரத் குழு தலைவர் தமிழரசி சுப்பையா முன்னிலை வகிக்கிறார். முகாமில் சித்த மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளிக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை கே. எஸ். சுப்பையா பாண்டியன், தமிழரசி சுப்பையா மற்றும் டாக்டர் விஜய் கார்த்திக் ஆகியோர் இணைந்து செய்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0