கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது

Jun 20, 2026 - 14:49
Jun 20, 2026 - 14:50
கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது

கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது

திருச்சி சர்க்கார் பாளையம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் வில்லியன் அலெக்சாண்டர் (வயது 30.) சம்பவத்தன்று இவர் பாபு ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தின் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஜீவா நகர் சீரப்பநாயக்கன் தெருவை சேர்ந்த ரவுடியான விக்கி என்ற விக்னேஷ் 25 என்பவர் வில்லியன் அலெக்சாண்டரிடம் செலவுக்காக பணம் கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுக்கவே கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விக்கி என்ற விக்னேஷ் கைது செய்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0