திமுக ஆட்சியில் நிறைவேற்றாத இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் : முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

Jun 22, 2026 - 20:45

முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக திருச்சி மாநகர செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் இல்லத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பி. ரபிக்ராஜா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர்ஆலி ஜனாப். இடிமுரசு இஸ்மாயில் சிறப்புரையாற்றினார்.

 கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் பிச்சை, மாநில தலைமை கழக செயலாளர் சாதிக், மாநகர தலைவர் ஜாகீர் கான், மாவட்ட இளைஞரணி செயலாளர் மஜீத், துணை செயலாளர் ஹபிப் முகமது, பொருளாளர் முஸ்தபா, மாநில இளைஞரணி தலைவர் ஆரிபுல்லா, கமால் பாஷா, தலைவர் ஜாகீர் ஷரீப், கமாலுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்வது, மேலும் அமைச்சரவையில் இரண்டு இஸ்லாமியர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியதற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம். கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணைக்கட்ட எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை வரற்பது, தி.மு.க. ஆட்சியில் இஸ்லமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்றவில்லை. எனவே தமிழக முதல்-அமைச்சர் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை 3.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0