பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி ஒளிபரப்பு மற்றும் கருத்துக்காட்சி
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி ஒளிபரப்பு மற்றும் கருத்துக்காட்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி மாவட்டம், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் சார்ந்த பயிற்சிகள், நவீன தொழில்நுட்பங்கள், செயல்முறை விளக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் 23 வது தவணை வெளியீடு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் 20.06.2026 அன்று மாலை 4.00 மணி அளவில் மேற்கு வங்காளம் மாநிலத்திலிருந்து பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் 23 வது தவணையினை விடுவித்தார். இதனை ஒட்டி சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இந்நிகழ்ச்சியின் இணைய வழி நேரடி ஒளிபரப்பு விவசாயிகளுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ந.புனிதவதி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருட்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் குறித்து விவரித்தார். திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திருமதி இர. ஜெயராணி நிகழ்ச்சியை துவக்கி வைத்து பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் நன்மைகள், இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விவசாயிகள் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கினார். வேளாண் அறிவியல் நிலைய இணைய்ப்பேராசிரியர் முனைவர் சகிலா தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மூலம் வெளியிடப்பட்ட நவீன ரகங்கள் குறித்து எடுத்துரைத்தார். முனைவர் ராதிகா விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றி தொழில்நுட்ப உரை வழங்கினார். முனைவர் மாரிமுத்து அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும், வேளாண்மை அறிவியல் நிலைய வளாகத்தில் நவீன இரகங்கள், உயிர் உரங்கள், இயற்கை இடுபொருட்கள், பயிர் ஊக்கிகள், பசுந்தாள் உரப்பயிர்கள் குறித்த கருத்துக்காட்சி காட்சிப்படுத்தப்பட்டது. இதில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு வட்டாரங்களை சேர்ந்த 120 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கு பெற்று பயனடைந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0