திருச்சி மாவட்டம், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் அதிக இலாபம் தரும் கால்நடை வளர்ப்பு பயிற்சி

Jun 25, 2026 - 20:17
திருச்சி மாவட்டம், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் அதிக இலாபம் தரும் கால்நடை வளர்ப்பு பயிற்சி

திருச்சி மாவட்டம், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் அதிக இலாபம் தரும் கால்நடை வளர்ப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி மாவட்டம், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் சார்ந்த பயிற்சிகள், நவீன தொழில்நுட்பங்கள், செயல்முறை விளக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, லாபம் தரும் கால்நடை வளர்ப்பு பற்றிய நிலையப் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ந.புனிதவதி துவக்கி வைத்து ஒருங்கிணைந்த பண்ணையத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் கால்நடை வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். பெட்டவாய்த்தலை கால்நடை உதவி மருத்துவர் ஹரீஷ் அவர்கள் அதிக லாபம் ஈட்டும் துறையான கால்நடை வளர்ப்பில் கால்நடை இனங்களைத் தேர்வு செய்தல், கால்நடை பராமரிப்பு, கொட்டகை அமைத்தல், தீவன மேலாண்மை, நோய் பராமரிப்பு, செயற்கை கருவூட்டல், பால் உற்பத்தி போன்ற தலைப்புகளில் தொழில்நுட்ப உரை வழங்கினார். இணைப்பேராசிரியர் முனைவர் ராதிகா, தீவனப்பயிர் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து விவரித்தார். இணைப்பேராசிரியர் முனைவர் மு.சகிலா, இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதோடு கால்நடை பராமரிப்புக்கு ஏற்ற தீவனப் பயிர் வகைகள் குறித்து விளக்கினார். இப்பயிற்சியில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0