திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் சர்வ தேச யோக தின விழா

Jun 26, 2026 - 13:43
Jun 26, 2026 - 13:44
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் சர்வ தேச யோக தின விழா

சர்வ தேச யோக தின விழா

திருச்சிராப்பள்ளி மாவட்ட மை பாரத் கேந்திரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருச்சி பிரிவு மற்றும் திருச்சிராப்பள்ளி யோகாசன ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அசோசியேசன் சார்பாக சர்வ தேச யோகா தின விழா அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவின் போது யோகா செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. விழாவிற்கு, திருச்சிராப்பள்ளி மை பாரத் கேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் திருமதி. கீர்த்தனா தலைமை தாங்கினார்.

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருமதி.ஞானசுகந்தி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ராணா மருத்துவமனை இருதய நோய் சிகிச்சை மருத்துவர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். யோகா செயல் விளக்க நிகழ்ச்சியை திருச்சிராப்பள்ளி யோகாசன ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அசோசியேசன் செயலாளர் யோகாசாரியர் ஜெ.ராஜசேகர் முன்னின்று நடத்தினார். திருச்சிராப்பள்ளி யோகாசன ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அசோசியேசன் பொருளாளர் திருமதி.முத்து சங்கரேஸ்வரி, திருவருள் குருகுலம் பொருளாளர் திருமதி.ராஜேஸ்வரி, மை பாரத் இளையோர் தொண்டர் திரு.தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் மை பாரத் கேந்திரா சார்ந்த இளைஞர் மன்ற பிரதிநிதிகள், விளையாட்டு வீரர்கள், பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் திரளாக கலந்துக் கொண்டனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0