இந்திரா கணேசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'தீட்சாரம்ப்– புதியதோர் தினவிழா'

Jun 29, 2026 - 20:05
இந்திரா கணேசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'தீட்சாரம்ப்– புதியதோர் தினவிழா'

இந்திரா கணேசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'தீட்சாரம்ப்– புதியதோர் தினவிழா'

இந்திரா கணேசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியருக்கான "தீட்சாரம்ப் – புதியதோர் தினவிழா" கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் செயலர் பொறியாளர் க. இராஜசேகரன் தலைமை வகித்தார். கல்விக் குழுமத்தின் இயக்குநர் முனைவர் க. பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கல்விக் குழுமத்தின் பதிவாளர் முனைவர் எம். அனுசுயா வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக பிஷப் ஹீபர் தன்னாட்சிக் கல்லூரியின் முன்னாள் வரலாற்றுத் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் ராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தனது உரையில், பள்ளிக் கல்வியை முடித்து கல்லூரி வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் மாணவர்கள் முதல் நாளிலிருந்தே தங்களது இலக்கைத் தெளிவாக நிர்ணயித்து, அதை நோக்கி திட்டமிட்டு பயணித்தால் வெற்றி நிச்சயம் என்பதை எடுத்துரைத்தார். மேலும், ஒழுக்கம், விடாமுயற்சி, நேர மேலாண்மை மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் மாணவர்கள் மனதில் பதியும் வகையில் விளக்கினார். முன்னதாக இந்திரா கணேசன் கல்லூரியின் முதல்வர் முனைவர் செ. காஞ்சிதேவி வரவேற்க முடிவில் துணை முதல்வர் முனைவர் மா. சங்கீதா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0