திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட "போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி"
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட "போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி"
திருச்சி மாவட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்கம், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை அனுசரிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம், நகர காவல்துறை, போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் துறை, திருச்சி மாவட்டக் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து ‘போதைப்பொருள் எதிர்ப்பு’ விழிப்புணர்வுப் பேரணியை நடத்தியது.
இப்பேரணியில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் மாணவர்கள் கலந்து கொண்டனர். மேஜர் சரவணன் சர்க்களில் தொடங்கிய இப்பேரணி திருச்சி ரயில்வே சந்திப்பு வரை நடைபெற்றது. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முழக்கங்களை எழுப்பினர். 'இளைஞனே விழித்தெழு போதையை எதிர்த்தெழு', 'போதையின் முற்றுப்புள்ளி சாதனையின் தொடக்கப்புள்ளி', 'போதை இல்லா உலகை உருவாக்குவோம்', போன்ற முழக்கங்களை எழுப்பி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மாணவர்களின் உற்சாகமான பங்கேற்புடன் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வு, போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் முயற்சியாக அமைந்தது.
What's Your Reaction?
Like
4
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
2