திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் புத்தகம் அறிமுகம்

Jul 9, 2026 - 20:42
திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் புத்தகம் அறிமுகம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் புத்தகம் அறிமுகம்

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் புத்தகம் அறிமுகம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் புத்தகத்தை அறிமுகப்படுத்த கணபதி சுப்ரமணியம் பெற்றுக்கொண்டார். செயலர் குணசேகரன், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன், முகமது சுபேர், கரூர் சந்துரு, ராஜேஷ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் விஜயகுமார் திருச்சி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் தொகுப்பு நூலினை அறிமுகப்படுத்தி பேசுகையில்,சேகரிப்புக்கலை என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல,அது வரலாறு, பண்பாடு, அறிவியல் மற்றும் சமூக நினைவுகளைப் பாதுகாக்கும் உயரிய பண்பாட்டு இயக்கமாகும். ஒரு சிறிய பொருளின் பின்னணியில் மறைந்திருக்கும் காலத்தின் சுவடுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பாலமாகச் சேகரிப்பாளர்கள் திகழ்கின்றனர். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பல்வேறு வகையான அரிய சேகரிப்புகளில் ஈடுபட்டு, அவற்றை பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்காகக் கண்காட்சிகளில் காட்சிப்படுத்தி, பொது அறிவையும் வரலாற்று விழிப்புணர்வையும் பரப்பி வரும் சமகால சேகரிப்புக் கலைஞர்களின் அர்ப்பணிப்பைப் பதிவு செய்யும் முயற்சியாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0