விஜயதசமியை முன்னிட்டு திருவருள் குருகுலம் சார்பில் மாபெரும் ஓவியப்போட்டி : வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு

Oct 5, 2025 - 13:42

திருச்சிராப்பள்ளி அளவிலான ஓவியப்போட்டி அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி விஜயதசமி முன்னிட்டு திருவருள் குருகுலம் சண்முகா நகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

 வயது பிரிவின் அடிப்படையில் சிறந்த ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண் பெண் இருபாலர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு நுழைவு கட்டணம் இல்லாமல் மாணவர்களுக்காக நடத்தப்பட்டது.

கலைச்சுடமணி ராஜசேகர் தலைமை தாங்கினார். ஓவிய ஆசிரியர் அமிலி இன் பெண்டா நடுவராக இருந்து மாணவர்களை தேர்ந்தெடுத்தார்கள். சிறப்பு விருந்தினர்களாக தேசிய யோகா நடுவர் திருமதி முத்து சங்கரேஸ்வரி, சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர் சிவமதி மற்றும் திரு அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்தினார்கள்.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 2