திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் போதைத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுத் தொடக்க விழா

Jul 21, 2026 - 16:08
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில்  போதைத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுத் தொடக்க விழா

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் போதைத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுத் தொடக்க விழா

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் போதைத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச. தலைமையில் நடைபெற்றது. அவர் தம் தலைமை உரையில் போதை இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கு நமது மாணவர்கள் உறுதி எடுக்க வேண்டும் என்பதை பல அனுபவக் கதைகள் மூலம் எடுத்துக் கூறினார். கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் பேசில் ஆனந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, என் போதையில்லாத சமுதாயத்தை உருவாக்குவது மாணவர்களின் கடமையை என்பதை உணர்ந்து இந்த முயற்சியை எடுத்திருக்கிற கல்லூரியை பாராட்டுவதாகவும், இது வழக்கமான ஒரு நிகழ்வாக அல்லாது உறுதிமொழி ஏற்கிற நிகழ்வாக அமைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். கல்லூரி முதல்வர் அருள்முனைவர் கு.ஆரோக்கியம், சே.ச. வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச. அருப்பே சுகாலய இயக்குநர் அருள்முனைவர் பிரான்சிஸ் ஜெயபதி, சே.ச. திரைப்பட நடிகர் சண்முகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு உரை வழங்கினர். முதல் நாள் நிகழ்வாக அருப்பே சுகாலய நலம் நாடி கலைக்குழுவினரின் உயிர் நன்று என்கிற போதை விழிப்புணர்வு நாடகம் நான்கு முறை நடத்தப்படுகிறது. இரண்டாம் நாள் நிகழ்வு போதைத் தடுப்புக் கண்காட்சியும், மூன்றாம் நாள் விழிப்புணர்வு பேரணியும் திட்டமிடப்பட்டுள்ளது. தொடக்க விழா நிறைவில் இணை முதல்வர் முனைவர் த.குமார் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சிகளை முனைவர் விமல் ஜெரால்டு தொகுத்து வழங்கினார். புல முதன்மையர், துணை முதல்வர்கள், துறைத்தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், பேராசிரியர்கள் மாணவ மாணவியர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வின் பங்கேற்றனர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அருப்பே சுகாலய இயக்குனர் அருள்முனைவர் பிரான்சிஸ் ஜெயபதி, சே.ச., ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் முனைவர் சே.சார்லஸ் மற்றும் மாணவப் பேரவையினர் மிக சிறப்பாக செய்திருந்தனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0