பெயர் விலாசம் தெரியாத முதியவர் மரணம் : நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்

Aug 3, 2026 - 20:54
Aug 3, 2026 - 20:54
பெயர் விலாசம் தெரியாத முதியவர் மரணம் : நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்

பெயர் விலாசம் தெரியாத முதியவர் மரணம் : நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்

திருச்சிராப்பள்ளி புத்தூர் பகுதியில் உள்ள திறந்தவெளி நூலகத்திற்கு முன்பு நடைமேடையில் பெயர், விலாசம் தெரியாத முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்தார். தகவல் அறிந்த‌ திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடம் சென்று விசாரிக்கையில், முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு புத்தூர் பகுதியில் அன்னதானம் வழங்கும் இடத்தில் உணவை பெற்று பொதுஇடங்களில் உண்டு, உறங்கி வந்துள்ளது தெரியவந்துள்ளது. மேற்படி நபர் உடலை யாரும் உரிமை கோரவில்லை.

மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன், உரிமை கோரப்படாத ஆதரவற்ற முதியவர் உடலை நல்லடக்கம் செய்ய, ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும், யோகா ஆசிரியருமான விஜயகுமார்க்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில், திருச்சி தென்னூர் குழுமிக்கரை மயானத்தில், சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் முன்னிலையில், உரிமை கோரப்படாத ஆதரவற்ற முதியவர் உடலுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்குகள் செய்து சமூக செயற்பாட்டாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் நல்லடக்கம் செய்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0