திருச்சியில் 6 நாட்கள் இந்திய எலும்பியல் சங்கம் சார்பில் எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி
இந்திய எலும்பியல் சங்கம் சார்பில் எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி
எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கிய வாரம் ஆக.3ம் தேதி முதல் 7ம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தேசிய விழிப்புணர்வு இயக்கத்தின் ஒரு பகுதியாக திருச்சி எலும்பியல் சங்கம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மக்களுக்கான விழிப்புணர்வு முகாம்கள், பரிசோதனை முகாம்கள் மற்றும் சமூக நல நடவடிக்கைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து திருச்சி எலும்பு மற்றும் மூட்டு மருத்துவர்களும்ம், திருச்சி எலும்பியல் சமூக தலைவர் பாலசுப்ரமணியன், செயலாளர் டெரன்ஸ் ஜோஸ் ஜெரோம், மத்திய மண்டல உறுப்பினர் தேவேந்திரன், ரெத்னா குளோபல் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரவீன் தாஸ் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், சரியான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பது, காயங்களைத் தவிர்ப்பது, முதியோர் கீழே விழுந்து காயமடைதலை தவிர்க்க வழிவகை மற்றும் எலும்பு முறிவுகளை குறைப்பது குறித்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதாவது ஆக.3ம் தேதி முதல் 8ம் தேதி வரை 6 நாட்கள் வாரியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆகஸ்ட் 3ம் தேதி நேராக உட்காருவதன் முக்கியத்துவம் குறித்தும், ஆகஸ்ட் 4ம் தேதி ஆரோக்கியமான எலும்புகளுக்கு தேவையான வாழ்க்கை முறை, ஆகஸ்ட் 5 சரியான முறையில் உடம்பை வைத்திருத்தல் குறித்த விழிப்புணர்வு, ஆகஸ்ட் 6ம் தேதி சாலையில் விதிமுறைகளை பின்பற்றி செல்லுதல் மற்றும் விபத்தை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு, ஆக.7ம் தேதி முதியோர் கீழே விழுவதை தவிர்க்க தேவையான]விழிப்புணர்வு, ஆகஸ்ட் 8ம் தேதி எலும்பியல் மருத்துவர்களுக்கான கலந்துரையாடல், பயிற்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியின் வாயிலாக எலும்பியல் சார்ந்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதே ஆகும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0