மீண்டும் எப்பொழுது தேர்தல் வந்தாலும் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி வருவார் : மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் கார்த்திகேயன் பேச்சு

Aug 7, 2026 - 14:38
Aug 7, 2026 - 15:02
மீண்டும் எப்பொழுது தேர்தல் வந்தாலும் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி வருவார் : மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் கார்த்திகேயன் பேச்சு

எப்பொழுது தேர்தல் வந்தாலும் மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி வருவார் : மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் கார்த்திகேயன் பேச்சு

திருச்சி மாநகர் மாவட்டம் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி உறையூர் வடக்கு பகுதி அதிமுக சார்பில் உறையூர் நவாப் தோட்டம் உப்பட பல்வேறு பகுதிகளில் 5 இடங்களில் அ.தி.மு.க. கொடியேற்றுவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உறையூர் வடக்கு பகுதி செயலாளர் உறந்தை முத்தையா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் மலர்விழி, வட்ட செயலாளர்கள்சிவ சுப்ரமணியன், சுப்ரா, வெஸ்லி, ஜெயபால் சதீஷ்குமார், பாபர் அலி ஆகியோர் வரவேற்றனர்.

மாவட்ட மகளிரணி செயலாளர் செயற்குழு உறுப்பினர் வனிதா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஜெ பேரவை மாநில துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், டி.ஆர்.சுரேஷ் குமார், மாவட்ட துணை செயலாளர் வெல்லமண்டி சண்முகம், ஜெ பேரவை மாவட்ட செயலாளர் பொன்னார், பொருளாளர் மார்க்கெட் தங்கராஜ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பல்வேறு இடங்களில் அதிமுக கொடியை, மாநகர், மாவட்ட செயலாளர், ஆவின் முன்னாள் தலைவர் என்ஜீனியர் கார்த்திகேயன் ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேல் ஆகியோர் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் அதிமுக மாநகர், மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் பேசும் பொழுது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நீங்கள் தவெகவுக்கு வாக்களித்தீர்கள். ஆனால் இன்று 2500 மகளிர் உரிமை தொகையை உங்களுக்கு கிடைத்ததா? தமிழகம் முழுவதும் பஸ்சில் இலவசமாக செல்ல முடிகிறதா?சிந்தித்து பார்க்க வேண்டும். ஆனால் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் பெண்கள், மாணவர்கள் இப்படி அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார். அதே திட்டங்களை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் தொடர்ந்து செய்தார். தாய் உள்ளத்தோடு ஜெயலலிதா உங்களுக்கு செய்ய திட்டங்களை பொதுமக்களாகிய நீங்கள் இந்த நேரத்தில் எண்ணிப் பார்த்து நன்றி கடன் செலுத்த வேண்டும். எனவே வருகின்ற உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தலில் பொதுமக்கள் சிந்தித்து அதிமுகவை ஆதரிக்க வேண்டும். எப்பொழுது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் மீண்டும் எடப்பாடி முதலமைச்சர் ஆக வருவார் என்று பேசினார். கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல் பேசும்பொழுது ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் ஒரே கட்சி அதிமுக தான் அந்த கட்சியின் தரத்தை வலுப்படுத்தபொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மாவட்ட துணை செயலாளர் ஜெயஸ்ரீ, பொதுக்குழு உறுப்பினர் தென்னூர் அப்பாகுட்டி, பாலசுப்பிரமணி, கலை பிரிவு தினேஷ், மாணவரணி பாலமோகன்ராஜ், வரகனேரி ராஜேந்திரன், பாலாஜி, ஜான் எட்வர்ட், திருநாவுக்கரசு, பிஎம்.குமார், சுரேஷ்குப்தா, சுதாகர், இலியாஸ், ராஜ்மோகன், பாலாஜி, திருநாவுக்கரசு, சிந்தாமணி மகாதேவன், கிராப்பட்டி கமலஹாசன், வசந்தம் செல்வமணி, கல்லுக்குழி சுந்தர் சிங், முத்துக்குமார், செல்லப்பா, மோகன், எடத்தெரு பாபு, ஜெயலலிதா பேரவை இன்ஜினியர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் ஜோசப் செபா, ஜெயகுமார், ராஜாளி சேகர், வெஸ்லி, செல்லப்பா, புத்தூர் பாலு, ஈஸ்வரன், பொம்மாச்சி பாலமுத்து, ரபீக், ஜெயராஜ், டைமன் தாமோதரன், அரவானூர் பன்னீர்செல்வம், என்ஜினியர் ரமேஷ், ஒத்தக்கடை மகேந்திரன், வண்ணாரப்பேட்டை ராஜன், இளநீர் ராஜேந்திரன், உறையூர் சந்திரசேகர், ஜெயந்தி சிவா ரபீக், வெல்லமண்டி கன்னியப்பன், ரமணி லால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0