ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு சார்பில் மது மற்றும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரை : பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொள்ள அழைப்பு
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு சார்பில் மது மற்றும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரை : பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொள்ள அழைப்பு
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் கணிசமான மக்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஐந்து ஆண்டுகளில் 210% அதிகரித்துள்ளது. சமூக போதைப்பொருள் அடிமைத்தனம் எனபது ஒரு சிக்கலான நோயாகும்.
இது உளவியல், உயிரியல் காரணிகளால் தூண்டப்படுகிறது. மன அழுத்தம், பதற்றம், மனச் சோர்வு போன்ற மனநலப் பிரச்சனைகள், சமூக அழுத்தம், தனிமை ஆகியற்றால் மக்கள் போதைக்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியால் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக மாணவர்களிடையே போதைப்பொருட்களின் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை நல்வழிப்படுத்துவது சமூகப் பொறுப்பாகும். தமிழ்நாட்டை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத ஆரோக்கியமான மாநிலமாக மாற்றும் நோக்கில், "மது மற்றும் போதை போதைக்கு எதிரான மக்கள் விழிப்புணர்வு பரப்புரை" ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக மாநில அளவில் வருகின்ற ஆகஸ்டு 15-30, 2026 ஆகிய நாட்களில் நடை பெற இருக்கிறது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பில் அமைப்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் முகமது ரியாஸ் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் இளங்கோ செய்தியாளர்களிடம் கூறும்போது, இன்றைய இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப்பொருட்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களைப் பாதுகாப்பான பாதையில் வழிநடத்துவதே இந்த பரப்புரையின் முதன்மை நோக்கமாகும். இப்பரப்புரையின் முக்கிய குறிகோள்களாக இளைஞர்கள் பாதுகாப்பு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை போதைப் பழக்கத்தின் பிடியில் இருந்து பாதுகாத்தல். போதையினால் ஏற்படும் உடல்நலக் கேடுகள், சமூக மற்றும் பொருளாதார சீரழிவுகள் குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்துதல். போதைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க மருத்துவ ஆலோசனை மற்றும் மறுவாழ்வு மையங்கள் மூலம் உரிய பயிற்சிகள் வழங்குதல். பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு மத்தியில் இச்செய்தி ஆழமாக சென்றடைவதற்காக தெருமுனை கூட்டம், பொதுக்கூட்டம், ஆளுமைகள் சந்திப்பு, நேர்காணல், கண்காட்சி, அரங்க கூட்டம், மாபெரும் மனித சங்கிலி என பல்வேறு பணிகள் இந்த பரப்புரையில் நடைபெற இருக்கிறது. மது மற்றும் போதை இல்லாத புதிய சமுதாயத்தைப் படைக்கச் சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த விழிப்புணர்வுப் பரப்புரையில் பெருந்திரளாகப் பங்கேற்று ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இவ்வாறு கூறினார்கள். உடன் மக்கள் தொடர்பு செயலாளர் நவாஸ்கான் உட்பட நிர்வாகிகள் உள்ளனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0