டிஎஸ்பி-க்கு போன் போடு.. காவல் ஆய்வாளர் முன்பே மிரட்டி பெண் அலப்பறை.. திருச்சி உறையூரில் பரபரப்பு
டிஎஸ்பி-க்கு போன் போடு.. காவல் ஆய்வாளர் முன்பே மிரட்டி பெண் அலப்பறை.. திருச்சி உறையூரில் பரபரப்பு
திருச்சி உறையூர் தெலுங்கு செட்டித் தெருவைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரி. இவர் தனது குடும்பத்துடன் கடந்த 30 ஆண்டுகளாகத் தங்களுக்குச் சொந்தமான பாரம்பரிய வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு இவர்களது வீட்டிற்கு அருகில் தனலட்சுமி என்பவர் இடம் வாங்கி குடியேறியுள்ளார். இதனைத் தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு உமாமகேஸ்வரி 1,500 சதுர அடி நிலத்தை வாங்கியுள்ளார். இந்த இடத்திற்குச் செல்ல இரு வீடுகளுக்கும் இடையே 2.5 அடி பாதை இருந்துள்ளது. ஆரம்பத்தில் அமைதியாகச் சென்று கொண்டிருந்த சூழலில், சமீபத்தில் தனலட்சுமி தமிழக வெற்றி கழகம் கட்சியில் உறுப்பினராக இணைந்துள்ளார். கட்சியில் இணைந்தது முதல் தனலட்சுமி சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி, எதிர் தரப்பினர் மீது பொய்யான புகார்களைக் காவல் நிலையத்தில் அளித்து மிரட்டி வருகிறார். மேலும் உமாமகேஸ்வரியின் பாதை மற்றும் நிலத்தை ஆக்கிரமித்து காம்பவுண்ட் சுவர் எழுப்பி கேட் போட்டு அவரது இடத்தை இவர் ஆக்கிரமிப்பு செய்து அடைத்துள்ளார். எதிர் தரப்பினர் வீட்டை நோக்கியவாறு சிசிடிவி கேமராக்கள் பொருத்தியும், 'திருச்சி நியூஸ் லோக்கல்' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி அதில் உமாமகேஸ்வரியின் கணவர் மற்றும் வீட்டைப் படம் பிடித்துத் தவறான தகவல்களுடன் பதிவிட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளார். இதுகுறித்து வருவாய்த்துறை, வட்டாட்சியர், மாநகராட்சி மற்றும் காவல் துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தும் ஆக்கிரமிப்புத் தொடர்ந்துள்ளது. பாதுகாப்பு கருதி உமாமகேஸ்வரியின் குடும்பத்தினர் மீது பொய் புகார்கள் அளித்து உமா மகேஸ்வரி குடும்பத்தினருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தினார் தனலட்சுமி. இதனால் கடந்த 3 மாதங்களாகச் சொந்த வீட்டை விட்டு வெளியேறி வேறொரு இடத்தில் தங்கியுள்ளனர் உமா மகேஸ்வரி குடும்பத்தினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆக்கிரமிப்பு காம்பௌண்ட் சுவர் கட்டியது தொடர்பாகக் கேட்பதற்காக வட்டாட்சியர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் நேரில் சென்று இருந்தனர். அப்போது
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0



