திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுதுறையில் அறக்கட்டளைச் சொற்பொழிவு

Aug 26, 2026 - 16:40
Aug 26, 2026 - 16:41
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுதுறையில் அறக்கட்டளைச் சொற்பொழிவு

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுதுறையில் அறக்கட்டளைச் சொற்பொழிவு

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறை சார்பாக அருள்தந்தையர்கள் சி.கே.சுவாமி, சூ.இராஜநாயகம், மேத்யூ ஜே.மூலேல், ஆ.செபாஸ்டின், ச.இலாசர் ஆகியோரின் பெயரிலான அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நடைபெற்றன.  கல்லூரி முதல்வர் அருள்முனைவர் கு.ஆரோக்கிமம், சே.ச. தலைமையேற்றினார். அவர் தம் தலைமை உரையில், அருள் தந்தையர்கள் தமிழுக்கும் சமூகத்திற்கும் கல்லூரிக்கும் பயன்பட்ட செயல்பாடுகளை நினைவு கூர்ந்து அவர்களை போற்றி தம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஆ.ஜோசப் சகாயராஜ், பணிமுறை இரண்டு ஒருங்கிணைப்பாளர் திருமிகு சி. பாக்கிய செல்வ ரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முனைவர் டே.வில்சன் வரவேற்புரையாற்றினார். முனைவர் ரெ.நல்லமுத்து அறக்கட்டளை அறிமுக உரை வழங்கினர்.  புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் சோம.இராசேந்திரன், மொழிக் கலப்பும் பண்பாட்டுச் சிதைவும் என்னும் பொருண்மையிலும், திருச்சிராப்பள்ளி நவலூர் குட்டப்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் துரை.மணிகண்டன் தமிழ் மென்பொருள்கள் என்னும் பொருண்மையிலும் சொற்பொழிவு ஆற்றினர். நிறைவில் முனைவர் யோகராஜ்  நன்றியுரையாற்றினார். முனைவர் பட்ட ஆய்வு மாணவர் தா. மேரி மார்டினா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். அறக்கட்டளை பொறுப்பாளர் முனைவர் கு.அந்தோணி ராஜா உள்ளிட்ட தமிழாய்வுத்துறை ப் பேராசிரியர்கள், தமிழ் இலக்கிய மாணவர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் உள்பட பலர் பங்கேற்று பயன்பெற்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0