திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப் பணித்துறை மாணவர்கள் சார்பாக கிராமிய முகாம்

Aug 30, 2026 - 14:27
Aug 30, 2026 - 14:28
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப் பணித்துறை மாணவர்கள் சார்பாக கிராமிய முகாம்

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப் பணித்துறை மாணவர்கள் சார்பாக கிராமிய முகாம்

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப் பணித்துறை மாணவர்கள் சார்பாக நடைபெற்ற கிராமிய முகாம் 2026-ன் ஆறாம் நாள் நிகழ்வுகள் திருமலைராயபுரத்தில் நடைபெற்றன. ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம் தொடங்கியது. இதில் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. மேலும் மருத்துவ முகாம் மதியம் மணி வரை நடைபெற்றது. தொடர்ந்து, புதுக்கோட்டை மதர் தெரசா இயற்கை மருத்துவமனை சார்பில் இயற்கை மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் பொதுமக்களுக்கு இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இவ்வாறு, பொதுமக்களின் நலனை மையமாகக் கொண்டு மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. முடிவில் நடைபெற்ற நிறைவு விழாவிற்கு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி துணை முதல்வர் முனைவர் J.G.R. சத்தியசீலன் தலைமையுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக திரு. S. தமீம் அன்சாரி, மனநல சமூகப் பணியாளர், ECRC – அரசு பழைய மருத்துவமனை, புதுக்கோட்டை பங்கேற்றார். அருட்தந்தை தேவசகாயம், பங்குத் தந்தை, திருமலைராயபுரம் வாழ்த்துரை வழங்கினார். மேலும், அருள்தாஸ் பங்குசகோதரர், பங்கு சகோதரர் டென்சிங் மற்றும் மணியார் செங்கோல் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவு விழாவின் போது, முதல் நாள் முதல் ஏழாம் நாள் வரையிலான கிராமிய முகாமின் நிகழ்வு அறிக்கையை முகாம் தலைவர் ஹரிஷ் வாசித்தார். முகாம் ஆலோசகர்கள் முகாம் நிறைவடையும் வரை மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும் உறுதுணையையும் வழங்கினர். தொடர்ந்து மாணவர்களின் பங்கேற்புடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனுடன் ஆறாம் நாள் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0