எம்.ஏ.எம். செவிலியர் கல்லூரியின் 10-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா
எம்.ஏ.எம். செவிலியர் கல்லூரியின் 10-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா
எம்.ஏ.எம். செவிலியர் கல்லூரியின் 10-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சிறுகனூர் நைட்டிங்கேல் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் B.Sc. Nursing மற்றும் P.B.B.Sc. (Nursing) ஆகிய படிப்புகளை நிறைவு செய்த மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மை நீதிபதி M. கிறிஸ்டோபர், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, பட்டங்களை மாணவர்களுக்கு வழங்கி வாழ்த்தினார்.
தமது சிறப்புரையில் அவர், “பெண்களே எதிர்காலத்தில் ஆகச்சிறந்த ஆளுமைகளாக உருவெடுப்பார்கள்” என்று குறிப்பிட்டார். கல்வி, மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்கள் தொடர்ந்து முன்னேறி வருவது பெருமைக்குரியதாகும் என்றார். மேலும், எதிர்காலத்தில் உலகப் பொருளாதாரத்திலும் இந்தியப் பொருளாதாரத்திலும் பெண்களின் பங்கு தவிர்க்க முடியாததாக இருக்கும் என்றும், பெண்கள் தங்களுக்கென தனித்துவமான திறமையுடனும் ஆளுமையுடனும் செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுவார்கள் என்றும் தெரிவித்தார்.
செவிலியர் துறையில் பணியாற்றும் மாணவிகள் மனிதநேயம், அர்ப்பணிப்பு, சேவை மனப்பான்மை ஆகியவற்றை முன்னிறுத்தி சிறந்த செவிலியர்களாக உருவாக வேண்டும் எனவும் அவர் வாழ்த்தினார். விழாவில் கல்லூரியின் தாளாளர் திருமதி ஹாஜிமா M.A. ஃபாத்திமா மன்சூர், செயலாளர் அல்ஹாஜ் M. ஷேக் மன்சூர், தலைமைச் செயல் அலுவலர் டாக்டர் S.M. அஸார் ஜமால் பீர் முகமது, இணைச் செயலாளர் திருமதி S.M. அஃப்ராஹ் நூர்நிசா மற்றும் முதல்வர் டாக்டர் J. கல்பனா, முன்னாள் முதல்வர் பேராசிரியர் ஜாஹிதா, கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் கு. ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பட்டம் பெற்ற மாணவர்கள் தங்களது கல்விப் பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் வகையில், செவிலியர் துறையில் திறமையுடனும் சேவை மனப்பான்மையுடனும் பணியாற்றி சமூகத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என விழாவில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0