திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் கலை கட்டிய குடும்ப விழா : நூற்றுக்கும் மேற்பட்ட மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பு : முன்னாள் பா.அமைச்சர் வளர்மதி பங்கேற்பு

Sep 9, 2026 - 19:22
Sep 9, 2026 - 19:24
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் கலை கட்டிய குடும்ப விழா : நூற்றுக்கும் மேற்பட்ட மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பு : முன்னாள் பா.அமைச்சர் வளர்மதி பங்கேற்பு

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் கலை கட்டிய குடும்ப விழா : நூற்றுக்கும் மேற்பட்ட மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பு : முன்னாள் பா.அமைச்சர் வளர்மதி பங்கேற்பு

திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக சார்பில் களமிறங்குவோம் வெற்றி பெறுவோம் என்ற தலைப்பில் திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக குடும்ப விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிமுக தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு விழா தொடங்கியது.

நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் சுதாகர் வரவேற்புரை ஆற்றினார். அதிமுக அமைப்பு செயலாளர், முன்னாள் எம்பி ரத்தினவேல் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கருத்துரை வழங்கினார்கள். திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் விளக்க உரை ஆற்றினார். மதியம் அறுசுவை விருந்துக்கு பிறகு மூத்த நிர்வாகிகள் கௌரவபடுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 இதில் அதிமுக மாநில மகளிர் அணி செயலாளர், முன்னாள் அமைச்சர் வளர்மதி கலந்து கொண்டு மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கருத்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர்கள், அணி செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள், மூத்த கட்சி நிர்வாகிகள் கௌரவப்படுத்தப்பட்டனர். முடிவில் எடமலைப்பட்டி புதூர் பகுதி செயலாளர் வசந்தம் செல்வமணி நன்றி கூறினரர்.

நிகழ்ச்சியில் மாநில பேரவை துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், டி.ஆர். சுரேஷ் குமார், பேரவை மாவட்ட செயலாளர் பொன்னார் மற்றும் மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி கழக செயலாளர்கள், பகுதி நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள், பகுதி நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், வட்ட நிர்வாகிகள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அதிமுகவில் தொய்வு ஏற்பட்டு சிலர் ஆளுங்கட்சியான தவெக விற்கு தாவினர். குறிப்பாக திருச்சி மாநகரில் நிர்வாகிகள் சிலர் சென்றனர். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக நடவடிக்கை எடுத்து புதிய மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து திருச்சியில் அதிமுகவின் பணிகளை விரைவுப்படுத்தினார்.

மேலும் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் கட்சியில் பணியாற்றும்இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய பதவிகளை வாங்கி கொடுத்தனர். குறிப்பாக திருச்சி மாநகரில் அதிக இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.இதனால் திருச்சி மாநகரில் அதிமுகவிற்கு புது ரத்தம் செலுத்தப்பட்டு கட்சி மீண்டும் புது பொழிவுவை பெற தொடங்கியது. இந்நிலையில் திருச்சி மாநகர அதிமுக வரலாற்றில் முதல்முறையாக அதிமுக நிர்வாகிகளை அழைத்து குடும்ப விழா நடத்தி மூத்த நிர்வாகிகளுக்கு திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக பாராட்டு மற்றும் பொற்கிழி வழங்கி இருப்பது அதிமுக மூத்த நிர்வாகிகள் இடையே உற்சாகத்தையும் பெருமையையும் ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0