திருச்சி எடமலைபட்டிப்புதூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
திருச்சி எடமலைபட்டிப்புதூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
திருச்சி மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண் 57க்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் எடமலைப்பட்டிபுதூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் பதிவேற்றம் செய்வதையும் முகாமின் செயல்பாடுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.சேஷத்ரிமயும் தீபிசானு, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அருள், வட்டாட்சியர் பிரகாஷ், நகரபொறியாளர் சிவபாதம், மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம், மண்டலக் குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்க்காதேவி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை மாமன்ற உறுப்பினர் முத்து செல்வம் ஒருங்கிணைத்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0