சிறப்பு குழந்தைகளுக்கு புத்தாடை, இனிப்பு வழங்கி தீபாவளி கொண்டாட்டம்

Oct 17, 2025 - 16:48
Oct 17, 2025 - 16:49
சிறப்பு குழந்தைகளுக்கு புத்தாடை, இனிப்பு வழங்கி தீபாவளி கொண்டாட்டம்

சிறப்பு குழந்தைகளுக்கு புத்தாடை, இனிப்பு வழங்கி தீபாவளி கொண்டாட்டம்

சிறப்பு குழந்தைகளுக்கு புத்தாடை, இனிப்பு, காரம் கொடுத்து தீபாவளி கொண்டாட்டம். இந்நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளரும், தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர் கே.சி.நீலமேகம், தலைமையில், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி. சதீஷ்குமார் சிறப்புரை வழங்கினார். முன்னதாக ஹோலி கிராஸ் நெஸ்ட் சிறப்புப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்சகோதரி நான்சி வரவேற்புரை ஆற்றினார்.

ஹோலி கிராஸ் நெஸ்ட் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் அருட்சகோதரி பபியோலா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வில் வரகனேரி ரவிச்சந்திரன் மற்றும் மணி பங்கேற்றனர்.

 நிகழ்வில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிறைவில் அனைத்து குழந்தைகளுக்கும் இனிப்பு, காரம் மற்றும் புத்தாடை தீபாவளி பரிசாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எய்ம் டூ ஹை மோகன் சிறப்பாக செய்திருந்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0