சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா

Nov 5, 2025 - 08:34
சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா

இனிய நந்தவனம் பதிப்பகம் சார்பில் சண் தவராஜாவின் சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. மணவைத் தமிழ் மன்ற செயலர் கவிஞர் நவமணி சுந்தரராஜ் தலைமை வகித்தார். இனிய நந்தவனம் பதிப்பாசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி சிறப்புரையாற்றி, தமிழ் எழுத்தாளர்கள் முதல் தொகுதி நூலினை வெளியிட மணவை தமிழ் மன்ற செயலாளர் நவமணி சுந்தரராஜ், நந்தவனம் சந்திரசேகரன், மேனாள் வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி, சூர்யா நினைவு அறக்கட்டளை நிறுவனர் சூர்யா சுப்பிரமணியன், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கல்வி குழு தலைவர் பொற்கொடி, திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க செயலாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். மேனாள் வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி நூல் ஆய்வுரையாற்றினார். தமிழ் எழுத்தாளர்கள் நூல் ஆசிரியர் சண் தவராஜா ஏற்புரையாற்றினார். முன்னதாக திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்க நிறைவாக கவிஞர் ஜனனி அந்தோணி ராஜ் நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0