அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் நவராத்திரி திருவிழா
அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் நவராத்திரி திருவிழா
அருள்மிகு சமயபுரம் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் தனது சுயம்பு திருமேனியில் நவக்கிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் உள்ளடக்கி இயந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் உள்ளடக்ரி சக்தி ஸ்தலங்களில் ஆதி பீடமாக சுயம்பு வடிவமாக சுதையினால் அஷ்ட புஜங்களுடன் அருள்பாலிக்கும் இத்திருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி அமாவாசை மறுதினம் பிரதமை முதல் நவமி வரை தேவி பாகவதம், அக்னி புராலாம். தேவி மஹாத்மியம் ஆகிய புராணக் கூற்றுகளின்படி அதர்மமான மஹிஷாசுரனை அழிக்க ஊசிமுனையில் துர்க்கை, மஹாலெட்சுமி, சரஸ்வதி என முறையே முதல், நடு, கடை என மும்மூன்று நாட்களாக ஒன்பது நாட்கள் கடும் தவம் புரிந்து 10-வது நாள் விஜயதசமியன்று வெற்றி பெற்ற திருநாளை நவராத்திரி பெருவிழாவாக கொண்டாடுவது இத்திருத்தலத்தின் மரபு. நவராத்திரி திருவிழா 22.09.2025 திங்கட்கிழமை துவங்கி 30.09.2025 செவ்வாய்க்கிழமை வரை நவராத்திரி உற்சவமும், சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நாளான 01.10.2025 அன்று இரவு 7.30 மணிக்கு அம்பாள் புறப்பாடாகி வன்னிமரம் அடைந்து அம்பு போடும் நிகழ்ச்சியும் நடைபெறும். நவராத்திரி உற்சவத்தின்போது தினமும் மாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 6.00 மணிக்கு புறப்பாடாகி திருக்கோயில் மேற்கு பிரகார நவராத்திரி மண்டபத்தில் வீற்றிருந்து அருள்பாலிப்பாள். தினசரி இரவு 8.00 மணியளவில் சிறப்பு தீபாராதனையும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெறவுள்ளது.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0