அண்ணா பிறந்த நாளை ஒட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் : முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட செயலாளர் சீனிவாசன் பங்கேற்பு

Sep 19, 2025 - 10:14
Sep 19, 2025 - 10:31
அண்ணா பிறந்த நாளை ஒட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் : முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட செயலாளர் சீனிவாசன் பங்கேற்பு

அண்ணா பிறந்த நாளை ஒட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் : முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட செயலாளர் சீனிவாசன் பங்கேற்பு

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் எடத்தெருவில் அவைத்தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஜெ பேரவை துணைச் செயலாளர் முத்துக்குமார், பகுதி செயலாளர்கள் ரோஜர், வாசுதேவன், கலீல் ரகுமான், அன்பழகன், ஏர்போர்ட் விஜி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஜினிகாந்த், ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், மாவட்ட துணை செயலாளர் வனிதா, திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.கு.அம்பிகாபதி, பகுதி செயலாளர் எம் ஆர் ஆர் முஸ்தபா, என்.எஸ். பூபதி, ஐடி பிரிவு வெங்கட் பிரபு, கலை பிரிவு ஜான் எட்வர்டு குமார், இளைஞர் பாசறை லோகநாதன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர்கள் வக்கீல் சுரேஷ் பாபு, பொன்னர், கருமண்டபம் சுரேந்தர், சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் ஷாஜகான், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சில்வர் சதீஷ்குமார், மாணவர் அணி துணைத்தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன், மகளிர் அணி துணை தலைவி வழக்கறிஞர் புவனேஷ்வரி, மகளிர் அணி இணை செயலாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட முன்னாள் மகளிர் அணி செயலாளர் டாக்டர் தமிழரசி சுப்பையா, கே எஸ் சுப்பையா பாண்டியன், எம்ஜிஆர் மன்றம் அப்பா குட்டி, வாழைக்காய் மண்டி சுரேஷ், ஐடி பிரிவு ராதா வேங்கடநாதன், கிஷோர், நாகு, புத்தூர் ரமேஷ், விஸ்வா, கதிரவன், நாகராஜ், மலைக்கோட்டை வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாலக்கரை ரவீந்திரன், மார்க்கெட் பிரகாஷ் ஆகியோர் நன்றி கூறினர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0