பஞ்சப்பூர் புதிய காய்கனி வணிக வளாகத்தின் செயல்பாடுகள் பற்றி விரிவான விளக்கம் தேவை : அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை

Nov 14, 2025 - 22:36
பஞ்சப்பூர் புதிய காய்கனி வணிக வளாகத்தின் செயல்பாடுகள் பற்றி விரிவான விளக்கம் தேவை : அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை

பஞ்சப்பூர் புதிய காய்கனி வணிக வளாகத்தின் செயல்பாடுகள் பற்றி விரிவான விளக்கம் தேவை : அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை

பஞ்சப்பூர் புதிய காய்கனி வணிக வளாகத்தின் செயல்பாடுகள் பற்றி விரிவான விளக்கம் தேவை என அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தலைவர் காதர் மைதீன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில்,கோரிக்கை இந்திய தேசதந்தை மகாத்மா காந்திஜி அவர்களின் காலடி பதித்த இடத்தில் அவர்களது பெயரால் இன்றளவும் காந்தி சந்தை செயல்பட்டு வருகிறது. திருச்சி மாநகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 5 மாவட்டங்களை சார்ந்த பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு ஏற்ப காய்கனிகளை அதன் தன்மை மாறாமலும் குறித்த நேரத்திலும் தினந்தோறும் சுமார் 2300 வியாபாரிகளால் விநியோகம் செய்து வருகிறோம். காந்தி சந்தையை சார்ந்த சுமார் 2300 வியாபாரிகளின் குடும்பங்களும், கடை ஊழியர்களும் மற்றும் விவசாயிகள் சுமைப்பணி கூலியாட்கள் மகளிர் வியாபாரிகள் என தோராயமாக சுமார் 10,000 குடும்பங்கள் முழுக்க முழுக்க இந்த காந்தி சந்தையை நம்பியே அனைவருக்கும் வாழ்வாதாரம் அமைந்துள்ளளது. இந்த சூழ்நிலையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் கடந்த 29.06.2024ம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் (தற்போது திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவராக இருக்கும் தாங்கள் 2024ம் ஆண்டு திருச்சி மாநகராட்சி ஆணையராக ஆட்சித்தலைவர் அவர்களின் அருகில் அமர்ந்து இருந்தீர்கள் என்பதை தாங்களும் அறிவீர்கள்) காந்தி சந்தையை சார்ந்த சில வியாபாரிகளுக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டு ஒரு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் புதியதாக காய்கனி வணிக வளாகம் கட்டப்போகிறோம் என வாய்மொழி வார்த்தைகளாலும், காணொளி காட்சி மூலம் திரையில் ஓர் வரைபடம் காண்பிக்கப்பட்டது. கூட்டத்திற்கு வருகை தந்த அத்தனை வியாபாரிகளும் இந்த அளவுள்ள கடைகள் வியாபாரிகளுக்கு வணிகம் செய்ய இடம் போதாது என்றும், மேலும் இந்த வரைபடத்தில் உருளைகிழங்கு மண்டிகள், வெங்காய மண்டிகள், பழ மண்டிகளுக்கு இடம் ஓதுக்கீடு செய்யவில்லை என்றும், தக்காளி சில்லரை கடை வியாபாரிகளை சுமார் 80% குறைத்து காட்டியும் அனைத்து மொத்த வியாபாரிகளின் கடைகளின் அளவுகளை மிகவும் குறைந்த அளவாக காட்டியும் மேற்கண்ட காரணங்களால் வியாபாரிகள் அனைவராலும் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தோம். அப்போது திருச்சி மாநகராட்சியில் ஆணையாராக இருந்த தாங்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் அவர்களும் இணைந்து எங்களை சாமாதனப்படுத்தி, இது வெறும் ஆலோசனை கூட்டம் மட்டும்தான், அடுத்தடுத்து வரும் காலங்களில் அதிக கூட்டங்கள் நடத்தி வியாபாரிகள் உங்கள் அனைவரையும் அழைத்து பேசி ஆலோசனைகளை நடத்தி, உங்களின் விருப்பப்படி தான் புதிய காய்கனி வாக்குறுதி அளித்தீர்கள். வணிக வளாகம் (பஞ்சப்பூர்) கட்டுமான பணிகள் துவங்கப்படும் எனவும், மேலும், பஞ்சப்பூர் வணிக வளாகம் தமிழக முதல்வர் அவர்களால் கடந்த 09.05.2025 தேதியன்று அடிக்கல் நாட்ட போவதாக செய்தி வந்தவுடன், காந்தி மார்க்கெட் சுமார் 25 சங்கங்களின் இணைந்த கூட்டமைப்பின் நிர்வாகிகள் கடந்த 07.05.2025த் தேதியன்று நகராட்சி துறை அமைச்சர் மாண்புமிகு கே.என்.நேரு அவர்களை அவர்களது இல்லத்திலே சென்று சந்தித்தோம். அப்பொழுது அமைச்சர் அவர்கள் தமிழக முதல்வர் அவர்கள் அடிக்கல் மட்டும் தான் நடப்போகிறார் என்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடந்த உடன் காந்தி மார்க்கெட்டை சார்ந்த அனைத்து வியாபாரிகளையும் அழைத்து ஆலோசனைகளை பெற்று, கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கள்ளிக்குடி வணிக வளாகம் சரியான முறையில் அமையாதது போல் அமைந்து விடாமல் உங்களது விருப்பப்படியே பஞ்சப்பூர் புதிய காய்கனி வணிகவளாகம் கட்டுமான பணி துவங்கப்படும் என்றும், எங்களது அரசை நம்பலாம் என்றும், வாக்குறுதி அளித்தார். நாங்களும் முழு நம்பிக்கையுடன் திரும்பி வந்தோம். ஆனால் இவை அனைத்திற்கும் மாறாக தற்போது வியாபாரிகளான எங்களை கலந்து ஆலோசிக்காமல் பஞ்சப்பூர் பகுதியில் சுமார் 236 கோடியில் ஒருங்கிணைந்த காய்கனி வணிக வளாகம் கட்டுமான பணிகள் தீவிரம் என பல நாளிதழ்களில் வரும் செய்திகளை கண்டு காந்தி சந்தையை சார்ந்த சுமார் 10,000த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பல கவலைகளையும் அச்சத்தையும் உண்டாக்கி விட்டது. எனவே, தற்போது பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய காய்கனி வளாகம் எதற்காக? யாருக்காக? கட்டப்படுகிறது என்பதையும், தற்சமயம் வியாபாரம் நடைபெற்று வரும் திருச்சி காந்தி மார்க்கெட்டின் நிலைமையையும், மார்க்கெட்டையே நம்பி உள்ள 10,000 குடும்பங்களின் வாழ்வாதார நிலைக்கும், தாங்கள் ஒரு தெளிவான அறிக்கை தருமாறும், அடுத்தடுத்து இருமுறை நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடர்களில் எங்களது திருச்சி மாவட்ட கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ் அவர்களின் கேள்விகளுக்கு முறையாக அமைச்சர் K.N.நேரு அவர்கள் காந்தி மார்க்கெட்டிற்கு ரூபாய் 60 கோடியில் புனரமைப்பு செய்யப்பட்டு தொடர்ந்து இங்கேயே இயங்கும் என்றும், கடந்த 15.10.2025 நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அமைச்சர் ரகுபதி அவர்கள் காந்தி மார்க்கெட்டிற்கு அருகில் உள்ள மகளிர் சிறை சாலையை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு, காந்தி மார்க்கெட் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் சட்ட மன்றத்திலேயே இரண்டு அமைச்சர்களும் வாக்குறுதி அளித்தார்கள். அவ்வாறு இருக்கையில், பஞ்சப்பூர் புதிய காய்கனி வணிக வளாகத்தின், செயல்பாடுகளை விரிவாக விளக்கம் தருமாறும் எங்களது அச்சத்தையும் போக்கி, எங்களது வாழ்வில் நிம்மதியை ஏற்படுத்தி தருமாறு தாங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் மனுவில் தெரிவித்தனர். இதில் செயலாளர் கந்தசாமி, பொருளாளர் வெங்கடாசலம், அவைத்தலைவர்கள் கருப்பையா, பாலசுப்பிரமணி, ஒருங்கிணைப்பாளர் கண்ணதாசன் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0