காந்தி மார்க்கெட்டில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை வைத்தவுடன் நடவடிக்கை எடுத்த எம்எல்ஏ இனிக்கோ இருதயராஜுக்கு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நன்றி
காந்தி மார்க்கெட்டில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை வைத்தவுடன் நடவடிக்கை எடுத்த எம்எல்ஏ இனிக்கோ இருதயராஜுக்கு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நன்றி
திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜுக்கு காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் காதர் மைதீன் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டார். அதில், திருச்சி காந்தி மார்கெட் உள்ளே சென்ற ஆண்டு வரை சுமார் 10 இடங்களில் குடிநீர் குழாய்கள் செயல்பட்டு வந்தது. இப்பொழுது, எல்லாம் துண்டிக்கப்பட்டு சில குழாய்கள் மட்டும் செயல்பட்டு வருகிறது. மார்கெட் உள்ளே பிழைப்பு நடத்தி வரும் வியாபாரிகள், பணி ஆட்கள், தொழிலாளர்கள், மார்கெட்க்கு வரும் விவசாயிகள், பொதுமக்கள் என அனைவருக்கும் தேவைக்கு ஏற்ப குறைந்த பட்சம் 15 இடங்களில் குடிநீர் வசதிகளை உடனடியாக ஏற்படுத்துத் தருமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு தமது அறிக்கையில் கூறியுள்ளார். வியாபார கூட்டமைப்பின் வேண்டுகோளை தொடர்ந்து இன்று மார்க்கெட் க்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வருகை தந்தார். அவரிடம் நமது கோரிக்கைகளை வலியுறுத்தி கூறியதின் அடிப்படையில், உடனடியாக மாநகராட்சி ஆணையரிடம் போனில் தொடர்பு கொண்டு, குடிநீர் குழாய்கள் சம்பந்தமான பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் முன்னிலையில் நடவடிக்கை மேற்கொண்டார். மேலும், நமக்கு தேவையான இடங்களில் நமக்கு நாமே திட்டத்தின் மூலமாக குடிநீர் சின்டெக்ஸ் தொட்டிகள் அமைத்து கொள்வதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். காந்தி மார்க்கெட் உள் பகுதியில் நிறைய இடங்களில் சாலை பராமரிப்பு பணிகளையும் பார்வையிட்டு, வியாபாரிகளின் தேவைகளையும் நன்கு கேட்டறிந்து அந்தந்த இடங்களிலேயே தீர்வுகளுக்கு வழிவகை செய்து கொடுத்தார். இதை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அவர்களுக்கு காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0