தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் நூல் வெளியீட்டு விழா

Nov 24, 2025 - 19:38
தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் நூல் வெளியீட்டு விழா

தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் நூல் வெளியீட்டு விழா

திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் நூல்வெளியீடு, கதை, கவிதை உரைவீச்சு நிகழ்ச்சி திருச்சி தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் த. இந்திரஜித் தலைமை வகித்தார். ஆட்சி மன்ற குழு உறுப்பினர் தமிழ் செம்மல் கவிஞர் கோவிந்தசாமி வரவேற்புரையாற்றினார். குறள் தலைப்பில் நரம்பியல் நிபுணர் மருத்துவர் எம்.ஏ.அலிம், அம்மா கவிதை தலைப்பில் கவிஞர் கவி.செல்வா, அப்பா தலைப்பில் ஆங்கரை பைரவி கதையும், கவிஞர் கோ.கலியமூர்த்தி சமகால இலக்கியங்கள் தலைப்பிலும் பேசினர். திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கசிறப்பு தலைவர் அரிமா சௌமா. இராஜரெத்தினம் சிறகு பதிப்பகம் வெளியிடும் தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் கட்டுரை தொகுப்பு நூலினை வெளியிட திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கம் அமைச்சர் பெ.உதயகுமார் முதல் பிரதியை பெற்று கொண்டார். திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் பொதுச்செயலாளர் எழுத்தாளர் வை.ஜவகர் ஆறுமுகம், சங்க துணைத்தலைவர் சூர்யா சுப்பிரமணியன், கவிஞர் பொறியாளர் மு.சுப்பையா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் யோகா ஆசிரியர் விஜயகுமார் ஏற்புரையாற்றினார். நிறைவாக அரிமா பா.முகமதுஷபி நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0