ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் BLO-க்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஆட்சியரிடம் மனு
ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் BLO-க்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஆட்சியரிடம் மனு
திருச்சி மாநகரில் SIR பணிகளில் BLO பணியில் உள்ள பலர் ஆளுங்கட்சியான தி.மு.க. நிர்வாகிகளின் ஆதரவாளராக செயல்பட்டு திருச்சி, மாநகருக்கு உட்பட்ட பல பகுதிகளில் இறந்துபோன வாக்காளர்கள் மற்றும் பழைய முகவரியிலிருந்து வேறு முகவரிக்கு சென்ற வாக்காளர்களின் SIR படிவங்களை தி.மு.க. நிர்வாகிகள் BLO-க்களிடமிருந்து கைப்பற்றி சட்ட விரோதமாக அதனை ஆன்லைனில் எவ்வித உண்மை தன்மை இல்லாமல் பதிவேற்றம் செய்து வருகின்றார்கள். அதற்கு உடந்தைகயாக செயல்படும் BLO-க்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சரவணனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மேலும் அந்த SIR-ல் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் அத்து மீறல்களில் ஈடுபடும் திமுகவினர், அவர்களுக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு என்றால் பொதுச்செயலாளர் அனுமதியோடு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி மனு அளித்தனர். பகுதி செயலாளர்கள் அன்பழகன் பூபதி என்கிற பூபேந்திரன், கலைவாணன், ரோஜா, எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வெங்கட் பிரபு, பேரவை இணைசெயலாளர் வழக்கறிஞர் தினேஷ் பாபு, பேரவை துணை செயலாளர் சுரேந்தர், வழக்கறிஞர்கள் முல்லை சுரேஷ், கௌசல்யா, சசிகுமார் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0