திருச்சியில் நாளை நடைபெற இருந்த பாஜக பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

Nov 30, 2025 - 22:21
திருச்சியில் நாளை நடைபெற இருந்த  பாஜக பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

திருச்சியில் நாளை நடைபெற இருந்த பாஜக பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து வருகிறார் இந்த நிலையில் நாளை திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சார்பில் புத்தூர் நான்கு ரோடு அருகில் மாலை 4 மணி அளவில் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் புயல் காரணமாக திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் நாளை நடைபெற இருந்த பாஜக பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் தேதி பின்னர் அறிவிக்கப்படும் வேண்டும் என்று பாஜகவினர் தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0