ஆதரவற்ற பிணங்கள நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளருக்கு சிறந்த சமூக சேவகர் 2025 விருது

Dec 17, 2025 - 16:08
ஆதரவற்ற பிணங்கள நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளருக்கு சிறந்த சமூக சேவகர் 2025 விருது

ஆதரவற்ற பிணங்கள நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளருக்கு சிறந்த சமூக சேவகர் 2025 விருது

அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகாடமி, தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனம் சார்பில் பெயர் விலாசம் தெரியாத, உரிமை கோரப்படாத, அடையாளம் காணப்படாத ஆதரவற்ற உரிமை கோரப்படாத பிணங்களை உரிய முறையில் கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளருக்கு சிறந்த சமூக சேவகர் 2025 விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. மேனாள் திருச்சி மாநகராட்சி சுகாதார குழுத் தலைவர் தமிழரசி சுப்பையா, மருத்துவர் விஜய் கார்த்திக் முன்னிலையில், அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகாடமி, தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத் தலைவர் கே.எஸ். சுப்பையா பாண்டியன், உரிமை கோரப்படாத ஆதரவற்ற நபர்களின் மரணம் கவனிக்கப்படாத நிலையில் பெயர், விலாசம், அடையாளம் காணப்படாத ஆன்மாக்கள் தங்கள் இறுதிப் பயணத்தில் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் கண்ணியத்துடன் நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் மனிதநேயப் பணியினைப் பணியினை பாராட்டி சிறந்த சமூகசேவகர்-2025 விருதினை வழங்கினார்.

இவ்விழாவில் திருச்சி ஜே.கே.சி. அறக்கட்டளை மற்றும் ஐ.சி.எப். பேராயம் பேராயர் முனைவர் ஜான் ராஜ்குமார், ஐ.சி.எப். பேராயம் மாநில பொதுச் செயலாளர் பேராயர் ஆபிரகாம் தாமஸ், கௌரவத் தலைவர் பேராசிரியர் ரவிசேகர், ஐ.சி.எப். பேராயம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் அருள், போதகர் ஜான் டோமினிக், அனைத்திந்திய மாற்று முறை மருத்துவ அகாடமி மாநிலச் செயலர் இயற்கை மருத்துவம் மற்றும் அக்குபஞ்சர் மருத்துவர் மகேஷ் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0