ஆளுநர் விருதாளருக்கு பாராட்டு

May 13, 2026 - 08:44
ஆளுநர் விருதாளருக்கு பாராட்டு

ஆளுநர் விருதாளருக்கு பாராட்டு

திருச்சி நீதிமன்றம் எம்.ஜி.ஆர் சிலை நடைபயிற்சியாளர்கள் அமைப்பு சார்பில் ஆளுநர் விருது பெற்ற அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு பாராட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தன்னலமற்ற மனிதநேயப் பணியினை பாராட்டி 2023ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆளுநர் விருது வழங்கினார். ஆளுநர் விருது பெற்ற அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சமூகப்பணிக்கு உறுதுணையாக இருந்துவரும் அவரது இணையர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், மகள் கீர்த்தனா விஜயகுமார் உள்ளிட்டோர் மனித நேயப்பணியை திருச்சி நீதிமன்றம் எம்ஜிஆர் சிலை நடை பயிற்சியாளர்கள் அமைப்பு தலைவர் சீனிவாசன், அவைத்தலைவர் லட்சுமி நரசிம்மன், துணைத்தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ஷேக் தாவூத், பொருளாளர் முருகேசன் உள்ளிட்டோர் பாராட்டினர். திருச்சி நீதிமன்றம் எம்ஜிஆர் சிலை நடை பயிற்சியாளர்கள் அமைப்பு பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஆளுநர் விருதாளர் விஜயகுமாரைப் பாராட்டினர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0