இந்திரா கணேசன் கல்லூரியில் இந்திரா அம்மையார் தங்கத் தாரகை விருது வழங்கும் விழா
இந்திரா கணேசன் கல்லூரியில் இந்திரா அம்மையார் தங்கத் தாரகை விருது வழங்கும் விழா
இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் தங்கத் தாரகை விருது விழா இந்திரா அம்மையார் நினைவாக நான்காம் ஆண்டாக வழங்கப்பட்டு வருகிறது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி சிறப்பு மாவட்ட நீதிபதி மாண்புமிகு கார்த்திகா, கல்லூரி நிர்வாக அறங்காவலர்கள் திருமதி. பிரியதர்சினி இராஜசேகரன் மற்றும் அனிதா பாலகிருஷ்ணன் ஆகியோர் பல்வேறு துறைகளில் சிறப்புத் வாய்ந்த மகளிருக்கு விருது வழங்கி சிறப்பித்தனர். இவ்விழாவில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. வாழ்நாள் சாதனையாளர் விருது, மேலும் திருமதி லட்சுமி அவர்களுக்கு வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து பரிகா பேகம், ஜோதி முத்து சமூக சேவை மற்றும் சமூக மேம்பாட்டு விருது, ஆர்த்தி சிறந்த கல்வியாளர் விருது, ஆர். ஶ்ரீதேவி பொது சேவை விருது, கீதா சரவணன் சிறந்த தொழில் முனைவோர் விருது, அகிலா சிறந்த மகப்பேறு மருத்துவர் விருது, நந்தினி சமூக மேம்பாட்டாளர் விருது, தனலெட்சுமி விளையாட்டு மற்றும் உடல் தகுதி விருது, கிருத்திகா நாகநாதன் சிறந்த ஆராய்ச்சியாளர் விருது, நித்யா இளையராஜா வாழ்நாள் சாதனையாளர் விருது, சாத்தம்மை பிரியா சிறந்த ஊக்கப் பேச்சாளர் விருது, லட்சுமி பிரபா சிறந்த இளம் விளையாட்டாளர் சாதனையாளர் விருது, வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. இந்திரா கணேசன் கல்லூரியில் பணிபுரிந்து வருகின்ற பல்வேறு துறை சார்ந்த பேராசிரியர்கள் சுகன்யா பாலசுப்பிரமணியம், லதா, தரண்யா, ஜெனிபர், ஈஸ்வரி, அங்காலேஸ்வரி, கீதா, அனிதா, லட்சுமி ஆகியோருக்கு சிறந்த கல்வியாளர் விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் செயலர் பொறியாளர் க. ராஜசேகரன் தலைமை உரை ஆற்றினார். கல்வி குழுமத்தின் இயக்குநர் முனைவர். க. பாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். கல்விக் குழுமத்தின் பதிவாளர் முனைவர். எம். அனுசியா வரவேற்புரை வழங்கினார். முனைவர் மா சங்கீதா நன்றியுரை ஆற்றினார். கல்லூரியின் மாணவர்கள் தனுஸ்ரீ மற்றும் திருப்புகழ் ஆகியோர் இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்கள். விழாவில் மாணவர்களின் யோகா மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்திரா கணேசன் கலை அறிவியல் கல்லூரி முனைவர் ச. ரமா பிரபா, முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
2