முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தில்லை நகர் கார்த்திக் வைத்திய சாலாவில் கே.எஸ். சுப்பையா பாண்டியன் ஏற்பாட்டில் 200 பேருக்கு நலத்திட்ட உதவிகள் : வாரியத் தலைவர் கு.ப. கிருஷ்ணன் வழங்கினார்
முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தில்லை நகர் கார்த்திக் வைத்திய சாலாவில் சுப்பையா பாண்டியன் ஏற்பாட்டில் 200 பேருக்கு நலத்திட்ட உதவிகள் : வாரியத் தலைவர் கு.ப. கிருஷ்ணன் வழங்கினார்
தமிழக வெற்றி கழக தலைவர் முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர், பொதுச்செயலாளர் என். புஸ்ஸி ஆனந்த் உத்தரவின் படி மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட த.வெ.க. தலைமை ஆலோசனையின் படி அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் 35 வது இலவச சித்த மருத்துவ முகாம் இன்று காலை (திங்கள்கிழமை) திருச்சி தில்லைநகர் 7வது குறுக்கு தெருவில் அமைந்துள்ள கார்த்திக் வைத்திய சாலாவில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் கே. எஸ். சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கினார் திருச்சி மாநகராட்சி முன்னாள் சுகாதாரக் குழு தலைவர் தமிழரசி சுப்பையா முன்னிலை வகித்தார். இதில் தமிழக வெற்றிக்கழக டெல்டா மண்டல பொறுப்பாளர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு. ப.கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, ஏழை எளிய பொது பொதுமக்கள் 200 பேருக்கு இலவச புடவைகள், உணவு மற்றும் இலவச மருந்துகள் வழங்கினார். முன்னதாக டாக்டர் விஜய் கார்த்திக் வரவேற்றார். நிகழ்வில் கு.ப.கி. சிரஞ்சீவி, பத்மநாதன், என்.எஸ். பூபதி, ஏர்போர்ட் விஜி, ரஜினிகாந்த், மலைக்கோட்டை ப. வினோத், உஸ்மான் பாபு, தென்னூர் ஷாஜகான், வரகனேரி அரசு, தென்னூர் ராஜா, லோகேஷ், நிர்மலா சித்த மருத்துவர்கள் மதிக்குமார், கவிதா மற்றும் மனோஜ் , ராஜேஸ்வரி, ஜேம்ஸ் மேரி, மைனாவதி, மாரியம்மாள், காளீஸ்வரி, ஆறுமுகம், சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கே எஸ் சுப்பையா பாண்டியன், தமிழரசி சுப்பையா மற்றும் டாக்டர் விஜய் கார்த்திக் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0