அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் சார்பாக முசிறி பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்

Jun 21, 2026 - 22:58
Jun 21, 2026 - 22:59
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் சார்பாக முசிறி பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் சார்பாக முசிறி பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் சார்பாக முசிறி பகுதில் உள்ள 140 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு,பொருளாதார சூழலில் பின்தங்கி உள்ள குழந்தைகளை தேர்வு செய்து அவர்களுக்கு நோட்டு புத்தகம் ஸ்கூல் பேக் மற்றும் எழுதுபொருட்கள் கடந்த 15 ஆண்டுகளாக வழங்கி வருகிறார்கள்

இந்த ஆண்டு இதன் துவக்கமாக முசிறி ஐயப்பன் கோவிலில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு முசிறி கரிமலை வாசன் கிளை தலைவர் ஜெயபால் குருசாமி தலைமையில், மாவட்ட துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வேதா மில்க் டைரி உரிமையாளர் சுரேஷ், தேசிய செயலாளர், தமிழ் மாநில இணைச்செயலாளர், திருச்சி மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் சிறப்புரை வழங்கி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் கொடுக்கும் நிகழ்வை துவக்கி வைத்தனர். மேலும் மாவட்ட பொருளாளர் சுரேஷ், துணைத் தலைவர் முத்து, அலுவலக செயலாளர் அம்சராம், தொண்டர் படை கண்காணிப்பாளர் புஷ்பராஜ், துணை கண்காணிப்பாளர் மதியழகன், வட்ட ஆய்வாளர்கள் குமார், கணேசன், மணிவண்ணன், தங்கவேலு ஆகியோர் கலந்து கொண்டனர். இது நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட இணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிருந்து நடத்தி வைத்தார். விழா முடிவில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகள் பெற்றோர்கள் மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0