உரிய நேரத்தில் சிகிச்சை மேற்கொண்டால் புற்றுநோயிலிருந்து முழுவதுமாக விடுபடலாம் : ஜி வி என் மருத்துவமனை டாக்டர்கள் நம்பிக்கை

Jun 29, 2026 - 11:13
உரிய நேரத்தில் சிகிச்சை மேற்கொண்டால் புற்றுநோயிலிருந்து முழுவதுமாக விடுபடலாம் : ஜி வி என் மருத்துவமனை டாக்டர்கள் நம்பிக்கை

உரிய நேரத்தில் சிகிச்சை மேற்கொண்டால் புற்றுநோயிலிருந்து முழுவதுமாக விடுபடலாம் : ஜி வி என் மருத்துவமனை டாக்டர்கள் நம்பிக்கை

திருச்சி இந்திய மருத்துவக் கழகத்தில் ஜிவிஎன் ரிவர்சைடு மருத்துவமனை சார்பில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் தின நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜிவிஎன் ரிவர்சைடு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் கவிதா தலைமை வகித்து பேசியது: வாழ் வியல் மாற்றம், உணவு பழக்க வழக்கம், புகை, மது உள்ளிட்ட பல காரணங்களால் புற்றுநோய் பாதிப்பு உலகெங்கும் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் புற்று நோயை கண்டறிந்து முறையான சிகிச்சை மேற்கொண்டால் முழுவதும் குணப்படுத்தலாம். நோயாளி வயது, நோயின் தீவிரம் குறித்து ஆராய்ந்து அதற்கு ஏற்ற வகையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோய் வந்த பிறகு மன தைரியத்துடன் சிகிச்சை மேற்கொள்வதுடன் குடும்பத்தாரின் அரவணைப்பும் இருக்க வேண்டும். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரிக்க வேண்டும், என்றார். டாக்டர் ஜிவிஎன் புற்றுநோய் மைய துறை தலைவர் டாக்டர் அருண் சேஷாச லம் பேசியது, புற்றுநோய் வந்த பிறகு அதைக் கண்டு அஞ்சாமல் சரியான சிகிச்சை மேற்கொண்டு அதை விரட்டியடிக்க வேண்டும். உடல், மன நலனை பேணுவது, விருப்பமானவற்றை நாள்தோறும் செய்வது, வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்றார். நிகழ்ச்சியில் புற்று நோயிலிருந்து குணம் அடைந்தவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மேஜிக் ஷோ, கர்நாடக இசை பாடல், கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. ஜிவிஎன் மருத்துவமனை தலைமை செயல் அலுவலர் சக்தி யாதவ், டாக்டர்கள் சுரேஷ், பாஸ்கரன், தலைமை செவிலியர் அலுவலர் மரியா பிரியா, ஓய்வு பெற்ற ஆசிரியை சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். டாக்டர் சோபியா வரவேற்றார். டாக்டர் பிரதீப் நன்றி. கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1