திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப வேண்டும் : ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

Jul 5, 2026 - 18:06
Jul 5, 2026 - 18:07
திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப வேண்டும் : ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப வேண்டும் : ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க திருச்சி மாவட்ட பேரவை கூட்டம் மாவட்ட தலைவர் சகாயராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் செந்தில்குமார் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வளர்ச்சி துறைக்கு சொந்தமான பழைய கட்டிடங்களை புனரமைத்து தர வேண்டும், 125 நாள் வேலை திட்டமான. திட்டமான மத்திய அரசின் வி.பி.ஜி ராம்.ஜி திட்டத்தின்கீழ் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாதாந்திர ஊதியத்தை உறுதிபடுத்த வேண்டும். 7 ஆண்டுகள் பணிமுடித்த ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு இளநிலை பொறியாளர் நிலைக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும். கிராம ஊராட்சிகளில் பணி புரியும் ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலைக்கான அரசாணை வெளியிட அரசை கேட்டு கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக துணை தலைவர் ஜான் பால் வரவேற்றார். முடிவில் சக்திவேல் நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0