பேரரசர் வாகைப்பூ சூடிய நேமத்தில் வருகிற ஆகஸ்ட் மாதம் 23 ந் தேதி முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழிபாடு செய்து பூமி பூசை நடத்துகிறார்
பேரரசர் வாகைப்பூ சூடிய நேமத்தில் வருகிற ஆகஸ்ட் மாதம் 23 ந் தேதி முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழிபாடு செய்து பூமி பூசை நடத்துகிறார்
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் போருக்கு செல்லும் போது, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே நேமம் ஊராட்சியில் அருள்பாளிக்கும் திரு நியமம் சப்தகன்னியர் மாகாளத்து காளா பிடாரி அம்மன் ஆசி பெற்று, வாகைப்பூ சூடி போருக்கு சென்று 16 க்கும் மேற்பட்ட போர்க்களங்களில் வென்றவர். பகைவர்களை வென்று செருமாறன் எனும் பெருமை பெற்றவர். வல்லதில் கோட்டை கட்டி ஆட்சி செய்து வல்லக்கோன் எனும் சிறப்பு பெயரை பெற்றவர். தஞ்சையிலும் கோட்டை கட்டி ஆண்டதால் தஞ்சைக்கோன் எனும் சிறப்பு பெயரை பெற்றவர். பேரரசர் வெற்றிக்கு பெரிதும் அருள்புரிந்த கொற்றவை மாகாளத்து காளா பிடாரி கோயில் நேமம் கிராமதில் தற்போது மீண்டும் புனரமைத்து, அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை சார்பாக வழிபாடு செய்யபட்டு வருகிறது. முத்தரையர் பேரரசின் குல மரபு வழியில், பேரரசர் வாகைப்பூ சூடிய நேமத்தில் வருகிற ஆகஸ்ட் மாதம் 23 ந் தேதி முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் வழிபாடு செய்து பூமி பூசை நடத்துகிறார். இவ்விழாவில் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், அனைத்துக்கட்சி தலைவர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேற்கண்ட நிகழ்வில் கலந்து கொள்ள டெல்லியில் உள்ள முன்னால் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் இல்லத்தில் பேராசிரியர் சந்திரசேகரன், சுந்தர், வழக்கறிஞர் அறிவழகன், டெல்லி செல்லையா ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். 23-8-2026 அன்று நடைபெறும் பூமி பூசை வழிபாட்டிற்க்கான ஏற்பாடுகளை அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை ஆலோசகர் ஆர்.வி.பரதன் தலைவர் ஆர்.வி.பாலமுருகன், துணைத்தலைவர் ஜோதி, நிர்வாக அறங்காவலர், ம சந்திரசேகரன், தர்மராஜ், அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் நேமம் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0