பிஷப் ஹீபர் கல்லூரியின் சமூகப் பணித்துறை மற்றும் WE Trust அமைப்பு சார்பில் கன்னங்குடி கிராமத்தில் அசோலா சாகுபடி பயிற்சி முகாம்

Jul 19, 2026 - 11:37
பிஷப் ஹீபர் கல்லூரியின்  சமூகப் பணித்துறை மற்றும் WE Trust அமைப்பு சார்பில் கன்னங்குடி கிராமத்தில் அசோலா சாகுபடி பயிற்சி முகாம்

பிஷப் ஹீபர் கல்லூரியின் சமூகப் பணித்துறை மற்றும் WE Trust அமைப்பு சார்பில் கன்னங்குடி கிராமத்தில் அசோலா சாகுபடி பயிற்சி முகாம்

திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியின் சமூகப் பணித்துறை மற்றும் WE Trust அமைப்பு இணைந்து, புதுக்கோட்டை மாவட்டம் கன்னங்குடி கிராமத்தில் அசோலா சாகுபடி பயிற்சியை 14.07.2026 அன்று பெண்களின் ஆளுமைதிறன் அறக்கட்டளையின் அலுவலகத்தில் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் கிராமப்புற பெண்கள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக WE Trust நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலரான திருமதி ஜி. தமிழ்ச்செல்வி, அசோலா சாகுபடியின் முக்கியத்துவம், ஊட்டச்சத்து மதிப்பு, கால்நடைகளுக்கான தீவன பயன்பாடு, குறைந்த செலவில் அதிக லாபம் தரும் வளர்ப்பு முறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும், அசோலா வளர்ப்பதற்கான குழி அமைத்தல், பாலித்தீன் விரித்தல், தண்ணீர் நிரப்புதல், மண் மற்றும் இயற்கை உரம் சேர்த்தல், அசோலா விதை இடுதல் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. பங்கேற்பாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி தங்களது சந்தேகங்களுக்கு விளக்கங்களைப் பெற்றனர். பயிற்சியின் முடிவில், அசோலா சாகுபடியை தங்களது வீடுகளிலும் பண்ணைகளிலும் நடைமுறைப்படுத்துவதற்கு பொதுமக்கள் ஆர்வம் தெரிவித்தனர். இந்த பயிற்சி கிராம மக்களிடையே நிலையான வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்திய பயனுள்ள நிகழ்வாக அமைந்தது. இந்நிகழ்சிக்கான ஏற்பாடுகளை பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப்பணித்துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர். ரா. சரஸ்வதி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இரண்டாம் ஆண்டு முதுகலை சமூகப்பணி மாணவர் ஜி. கோகுல் ஒருங்கிணைத்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0