திருச்சி இந்திரா கணேசன் அறக்கட்டளை முன் தொழில் முனைவு மையம் சார்பில் “அக்ரி இன்னோவேஷன் & பூட் கேம்ப் 2026”

Aug 7, 2026 - 17:42
Aug 7, 2026 - 17:43
திருச்சி இந்திரா கணேசன் அறக்கட்டளை முன் தொழில் முனைவு மையம் சார்பில் “அக்ரி இன்னோவேஷன் & பூட் கேம்ப் 2026”

திருச்சி இந்திரா கணேசன் அறக்கட்டளை முன் தொழில் முனைவு மையம் சார்பில் “அக்ரி இன்னோவேஷன் & பூட் கேம்ப் 2026”

திருச்சி இந்திரா கணேசன் அறக்கட்டளை முன் தொழில் முனைவு மையம், சார்பில் நடைபெற்ற “அக்ரி இன்னோவேஷன் & பூட் கேம்ப் 2026” முதல் நாள் நிகழ்ச்சி மாணவர்கள், தொழில்முனைவு ஆர்வலர்கள், புதுமையாளர்கள், தொழில்முனைவோர், ஆசிரியர்கள் மற்றும் வேளாண் ஆர்வலர்களின் உற்சாகமான பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் செயலாளர் எர். ஜி. ராஜசேகரன் அவர்களின் ஊக்கமும் வழிகாட்டுதலிலும், இயக்குநர் டாக்டர் ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலும், பதிவாளர் மற்றும் இந்திரா கணேசன் அறக்கட்டளையின் தலைமை செயல் அலுவலர் டாக்டர் மு. அனுசுயா அவர்களின் முழுமையான ஆதரவு மற்றும் ஒருங்கிணைப்புடனும் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முன் தொழில்முனைவு மைய மேலாளர் டாக்டர் மு. ஜோசப் சாலேத்ராஜ், வளநிலைப் பேச்சாளர்கள், தொழில்முனைவோர், புதுமையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியின் வேளாண் பொறியியல் துறைத் தலைவர் பேராசிரியர் வாணிஸ்ரீ மற்றும் அத்துறையின் ஆசிரியர்கள் தலைமையில் வேளாண் பொறியியல் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று அனைத்து அமர்வுகளிலும் சிறப்பாக ஈடுபட்டனர். தொடக்க அமர்வில் பி. கருப்பண்ணன், திட்ட ஒருங்கிணைப்பாளர், திருச்சிராப்பள்ளி, மற்றும் எஸ். சுகுந்தன் ஆகியோர் நிகழ்ச்சியின் நோக்கம், செயல்திட்டம் மற்றும் வேளாண் புதுமையின் அவசியம் குறித்து விளக்கமளித்தனர். நிலையான வேளாண்மை, நவீன தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவு ஆகியவை எதிர்கால வேளாண் வளர்ச்சிக்கான முக்கிய அடித்தளங்கள் என்பதை எடுத்துரைத்து, பங்கேற்பாளர்கள் தங்களது புதுமையான சிந்தனைகளை வெற்றிகரமான வேளாண் தொழில்முயற்சிகளாக மாற்ற வேண்டும் என ஊக்கமளித்தனர். முதல் தொழில்நுட்ப அமர்வில் “எதிர்கால வேளாண்மை மற்றும் உட்புற விவசாயம்” என்ற தலைப்பில் திருமதி பிரியதர்ஷினி, ஸ்ரீ அவ்வை ஃபார்ம்ஸ் & ஃபுட்ஸ் LLP, முசிறி அவர்கள் சிறப்புரையாற்றினார். நவீன விவசாய தொழில்நுட்பங்கள், கட்டுப்படுத்தப்பட்ட சூழல் விவசாயம், உட்புற விவசாய முறைகள் மற்றும் வேளாண் துறையில் உருவாகி வரும் புதிய தொழில் வாய்ப்புகள் குறித்து விரிவாக விளக்கினார். இந்நிகழ்ச்சியில் இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி மற்றும் தந்தை பெரியார் கல்லூரி மாணவர்கள், தொழில்முனைவோர், புதுமையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தொழில்நுட்ப அமர்வுகள், செய்முறை விளக்கங்கள் மற்றும் குழு செயல்பாடுகளில் அனைவரும் தீவிரமாக ஈடுபட்டு, நிலையான வேளாண்மை, வேளாண் புதுமை, மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், பிராண்டிங் மற்றும் தொழில்முனைவு தொடர்பான பயனுள்ள அறிவைப் பெற்றனர். பிற்பகல் அமர்வில் காளான் மற்றும் மைக்ரோகிரீன்ஸ் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் குறித்த நேரடி செய்முறை விளக்கம் நடைபெற்றது. இதில் மதிப்புக்கூட்டப்பட்ட வேளாண் பொருட்கள் தயாரிப்பு, பதப்படுத்தல் மற்றும் அவற்றின் வணிக வாய்ப்புகள் குறித்து பங்கேற்பாளர்கள் செய்முறை அனுபவம் பெற்றனர். அதனைத் தொடர்ந்து வேளாண் பொருட்களின் பிராண்டிங், பேக்கேஜிங், விலை நிர்ணயம் மற்றும் சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. தயாரிப்புகளின் தரமான வடிவமைப்பு, சந்தை நிலை நிறுத்தல், விலை நிர்ணய உத்திகள் மற்றும் திறமையான சந்தைப்படுத்தல் முறைகள் குறித்து நடைமுறை விளக்கங்கள் வழங்கப்பட்டன. நாளின் இறுதியில் “Build Your Agri Brand” என்ற குழு சவால் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்பாளர்கள் குழுக்களாக இணைந்து புதுமையான வேளாண் தொழில் முனைவு யோசனைகளை உருவாக்கி, அவற்றை படைப்பாற்றலுடன் வழங்கினர். இந்த செயல்பாடு குழுப்பணி, தலைமைத்துவம், பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் மற்றும் தொழில் முனைவு சிந்தனையை மேம்படுத்தியது. முதல் நாள் நிகழ்ச்சி முழுவதும் அறிவூட்டும், செயல்முறை அனுபவம் வழங்கும் மற்றும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது. நிபுணர்களின் உரைகள், செய்முறை விளக்கங்கள் மற்றும் குழு செயல்பாடுகள் மூலம் பங்கேற்பாளர்கள் வேளாண் புதுமை, மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் உருவாக்கம், தொழில்முனைவு, சந்தைப்படுத்தல் மற்றும் வணிக மேம்பாடு தொடர்பான மதிப்புமிக்க அறிவைப் பெற்றனர். இரண்டாம் நாளில் நடைபெறவுள்ள நிலையான வேளாண்மை, ஸ்டார்ட்அப் உருவாக்கம், தொழில்முனைவு மேம்பாடு மற்றும் வணிக இன்குபேஷன் தொடர்பான அமர்வுகளை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கினர். இந்நிகழ்ச்சியின் வெற்றிகரமான ஏற்பாட்டிற்காக இன்குபேஷன் செல் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆர். பரத் குமார், முன் தொழில்முனைவு மைய மேலாளர் டாக்டர் மு. ஜோசப் சாலேத்ராஜ், மற்றும் முன் தொழில் முனைவு மைய இணை மேலாளர் திருமதி த. பவித்ரா ஆகியோர் தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழுவினர் சிறப்பாக திட்டமிட்டு அனைத்து நிகழ்வுகளையும் திறம்பட ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்தினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0