திருச்சி எம்.ஏ.எம். கல்வியியல் கல்லூரியின் 14ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா : முனைவர் எட்வர்ட் வில்லியம் பெஞ்சமின் மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்
எம்.ஏ.எம். கல்வியியல் கல்லூரியின் 14ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா : முனைவர் எட்வர்ட் வில்லியம் பெஞ்சமின் மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்
எம்.ஏ.எம். கல்வியியல் கல்லூரியின் 14ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முனைவர் A. எட்வர்ட் வில்லியம் பெஞ்சமின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பட்டமளிப்பு விழாப் பேருரையாற்றி, மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.
தமது சிறப்புரையில், “இன்றைய மாணவர்களே நாளைய சமூகத்தின் வழிகாட்டிகள். கல்வியின் மூலம் அறிவு, ஒழுக்கம், மனிதநேயம் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டு, வருங்கால சமுதாயத்தை அறிவார்ந்த மற்றும் பொறுப்புள்ள சமுதாயமாக உருவாக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். மேலும், உலகின் பல்வேறு தலைவர்கள் கல்வியின் முக்கியத்துவத்தையும், சமூக முன்னேற்றத்தில் கல்வியின் தேவையையும் எடுத்துரைத்துள்ள கருத்துகளைச் சுட்டிக்காட்டி, பட்டம் பெறும் மாணவர்கள் தங்கள் அறிவையும் திறமையையும் சமூக முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
விழாவில் கல்லூரியின் தாளாளர் திருமதி M.A. பாத்திமா மன்சூர் மற்றும் செயலர் M. ஷேக் மன்சூர் ஆகியோர் மாணவ–மாணவிகளுக்கு வாழ்த்துரை வழங்கினர். கல்விக் குழுமத்தின் துணைத் தலைவர் M.A. சபூர் நிஷா, தலைமைச் செயல் அதிகாரி முனைவர் S.M. அசார் ஜமால் பீர் முகமது, இணைச் செயலர் S.M. அப்ரா நூறு நிஷா செவிலியர் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் ஜாகிதா மற்றும் தற்போதைய முதல்வர் முனைவர் கல்பனா ஆகியோர் கலந்து கொண்டு பட்டம் பெற்ற மாணவர்களை வாழ்த்தினர். கல்லூரி முதல்வர் முனைவர் ரவிக்குமார் ஆண்டறிக்கையை சமர்ப்பித்து, கல்லூரியின் கல்வி, மாணவர் நலன் மற்றும் பல்வேறு செயல்பாடுகள் குறித்த சாதனைகளை எடுத்துரைத்தார். விழாவில் அனைத்து துறைகளையும் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவ–மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வரலாற்றுத் துறை பேராசிரியர் கோபிநாத் மற்றும் கணிதத் துறை பேராசிரியர் ரவிக்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்து மேற்கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0