திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் உழைக்கும் தொண்டர்களுக்கு பதவி வழங்கிய எடப்பாடி பழனிசாமி : கட்சியினர் உற்சாகம்

Sep 6, 2026 - 16:20
Sep 6, 2026 - 16:20
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் உழைக்கும் தொண்டர்களுக்கு பதவி வழங்கிய எடப்பாடி பழனிசாமி : கட்சியினர் உற்சாகம்

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் உழைக்கும் தொண்டர்களுக்கு பதவி வழங்கிய எடப்பாடி பழனிசாமி : கட்சியினர் உற்சாகம்

திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளராக முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் பதவி ஏற்ற நாள் முதல் பல்வேறு பணிகளை முன்னெடுத்து செய்து வருகிறார். அதன் அடிப்படையில் இளைஞர்களுக்கு பல்வேறு பதவிகளை வழங்கி கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சு வருகிறார். இதனால் கடந்த காலங்களை விட தற்போது திருச்சி மாநகரில் அதிமுக புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக நேற்று திருச்சி நீதிமன்றம் எதிரில் உள்ள வ உ சி சிலைக்கு அனைத்து கட்சி பிரமுகர்கள், அமைப்புகள், சங்கங்கள் காலை 6 மணி முதல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் அமைச்சர் ரமேஷ் தலைமையில் வ உ சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அப்பொழுது அடுத்ததாக மாலை அணிவிக்க சிலைக்கு வெளியே அதிமுகவினர் திரண்டு இருந்தனர். ஆனால் தவெகவினர் சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக வ உ சி சிலை அருகில் நின்று கொண்டு தொடர்ந்து செல்போனில் படம் எடுத்துக்கொண்டு இருந்தனர். இதனால் வ உ சி சிலை அருகில் நின்ற அதிமுகவினர் சிலையை விட்டு கீழே இறங்குங்கள் என்று கூறியுள்ளனர். இதனை கேட்ட த.வெ.க.வினர் பதிலுக்கு சத்தம் போட்டனர். இதையடுத்து அதிமுக எடப்பாடி வாழ்க என கோஷமிட்டனர். பதிலுக்கு த.வெ.க.வினர் முதலமைச்சர் விஜய் வாழ்க என்று பதிலுக்கு கோஷமிட்டனர். இதனால் இரு கட்சியினர் மாறி மாறி கோஷம் எழுப்பி கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது பிறகு போலீசார் அங்கு வந்து இரு கட்சிகளையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அந்த நேரத்தில் அதிமுக கட்சியினர் பெருமளவில் திரண்டு எதிர்ப்பு கோஷம் தெரிவித்ததால் தவெகவினர் உடனடியாக சிலையிலிருந்து கீழே இறங்கினர். இச்சம்பவம் அதிமுகவின் எழுச்சியை காட்டுகிறது என அப்பகுதியில் இருந்த பல்வேறு தரப்பினர் கூறினார்கள். இதற்கு முக்கிய காரணம் இளைஞர்களுக்கு அதிக அளவில் பதவிகள் வழங்கியதும், கட்சியில் இருந்து கொண்டு செயல்படாத பகுதி மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகளிடமிருந்து பதவியை பறித்து, கட்சிக்கு உண்மையாக உழைக்கும் தொண்டர்களுக்கு பதவியை வழங்கியதால் தொண்டர்கள் உற்சாகத்துடன் இருப்பதாக பல்வேறு தரப்பினர் கூறினார்கள்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1