அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் : நிர்வாகிகள் தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுரை
அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் : நிர்வாகிகள் தொண்டர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை
திருச்சி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ,பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் சவுந்திர பாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, கதிரவன், மாநகரச் செயலாளர்கள் மாநகராட்சி மேயர் அன்பழகன்,மண்டல குழு தலைவர் மதிவாணன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் திரண்டு வந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி கலைஞர் அறிவாலயத்திற்கு சென்றார். அங்கு திருச்சி மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட திருவரங்கம் தொகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார். மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, அருண்நேரு எம்.பி , மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவரங்கம் எம்.எல்.ஏ பழனியாண்டி வரவேற்றார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளை பாராட்டி கௌரவித்தார். அதைத்தொடர்ந்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர், தொகுதி வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? என கேட்டறிந்தார். பின்னர், தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும், திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, செந்தரபாண்டியன், கதிரவன், ஸ்டாலின் குமார், மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம், மத்திய மாவட்டம் முன்னாள் துணை செயலாளர் குடமுருட்டி சேகர், ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல், அந்த நல்லூர் முன்னாள் சேர்மன் துரைராஜ், உள்ளிட்ட ஏராளமானனோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0